search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுப்பிரமணியன் சுவாமி"

    • தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பல்வேறு தரப்பை சேர்ந்த 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.
    • கடந்த 10 ஆண்டுகளில் ராம ராஜ்ஜியத்தின் படி அவர் பிரதமராக நடக்கவில்லை என கூறியுள்ளார்.

    அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் விழா சிறப்பாக நடைபெற உள்ளது. தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பல்வேறு தரப்பை சேர்ந்த 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களும் அயோத்திக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில், பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், அயோத்தி ராமர் கோவில் பூஜையில், மோடியின் 'பிரதமர்' என்ற அந்தஸ்து பூஜ்ஜியம்தான். அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் ராமரை பின்பற்றியது இல்லை. குறிப்பாக அவரது மனைவியிடம் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் ராம ராஜ்ஜியத்தின் படி அவர் பிரதமராக நடக்கவில்லை என கூறியுள்ளார்.

    • கலவரம் நடக்கும் மணிப்பூர் தலைநகர் இம்பால் போய் பார்க்கவில்லை.
    • பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தை பொறுத்தவரை ஒரு நல்ல வாய்ப்பு இருக்கிறது.

    மதுரை:

    பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மணிப்பூரில் நடைபெறும் மதக்கலவரம் நீடித்துக் கொண்டே செல்கிறது. அங்கு மனித உரிமைகள் நிறைய நடக்கிறது. மெய்தி எனும் இந்து சமுதாயம் சுமார் 50 சதவீதம் பேர் உள்ளனர். மாற்று சமுதாயத்தினர் அவர்களை முந்த முயற்சிக்கிறார்கள்.

    பிரதமர் மோடி அமெரிக்கா போவதற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். இது வருத்தம் அளிக்கிறது. கலவரம் நடக்கும் மணிப்பூர் தலைநகர் இம்பால் போய் பார்க்கவில்லை. பிரதமர் உடனே போய் கலவரத்தை அடக்க முயற்சி செய்ய வேண்டும்.

    பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தை பொறுத்தவரை ஒரு நல்ல வாய்ப்பு இருக்கிறது. எல்லாரும் சேர்ந்து வந்தால் ஒற்றுமையாக செயல்பட்டால் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளது. நரேந்திர மோடி பிரதமராக இருந்த காலத்தில் எதுவும் செய்யவில்லை.

    கோவில்கள் அனைத்தும் வெளிவர முயற்சி செய்து கொடுத்தோம். ஜாதி, மதம் மற்றும் அனைத்து இந்துக்களையும் ஒற்றுமையாக்க முயற்சி செய்தோம். இந்து ஒற்றுமைக்காக பா.ஜனதாவுக்கு ஓட்டு கிடைக்கும். பிரதமர் மோடி நல்லது செய்தார் என இங்கு உள்ள ஜால்ரா போடுபவர்கள் கூறினார்கள். அதில் எந்த உண்மையும் இல்லை. மோடி எதுவும் செய்யவில்லை என தொண்டர்கள் கூறுகிறார்கள்.

    வெள்ளைக்காரர்கள், முஸ்லிம்கள் நமது கலாச்சாரத்தை கெடுத்து விட்டு சென்றனர். அதை மீட்பதற்கும், மறுமலர்ச்சி ஒற்றுமையை உருவாக்க வேண்டும் என இந்துக்களிடம் எண்ணம் வந்துள்ளது. அதற்காக நமக்கு ஓட்டு கிடைக்கும்.

    மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க பெயர் வைப்பது குறித்து பாராளுமன்றத்தில் முடிவு செய்யப்பட்டது. பிரபுல் பட்டேல் என்னிடம் கூறினார். மதுரை விமான நிலைய திறப்பு விழா சமயத்தில் மேடையில் பிரபுல் பட்டேல் அறிவிக்க இருந்த நேரத்தில் ப.சிதம்பரம் அறிவிக்க விடாமல் தடுத்து விட்டார்.

    முத்துராமலிங்க தேவர், தேவர் என்பதை தவிர நாட்டுடைய விடுதலைக்காக போராடியவர். ராஜ குடும்பத்தை சேர்ந்தவர். மதுரை விமான நிலையத்திற்கு அவர் பெயர் வைக்காதது எனக்கு மிகவும் வருத்தம். இன்றைக்கு ஆட்சியில் இருந்தாலும் யாரும் ஆதரவு அளிக்கவில்லை. தி.மு.க., அ.தி.மு.க. யாரும் ஆதரிக்கவில்லை.

    இவர்கள் கடிதம் கொடுத்தால் பாராளுமன்றத்தில் பேசி மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் வைக்க ஏற்பாடு செய்வேன். ஒருவருக்கு ஒருவர் பொறாமையில் பேசி செயல்படுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக போராடியதில் இருந்தே அவரை நான் அறிவேன்.
    • ஒரு காலத்தில் ஜெயலலிதா சக்திவாய்ந்த பெண்மணியாக இருந்தார்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில், இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பின் (பிக்கி) சார்பில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான சுப்பிரமணியன் சுவாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களால் மிரட்ட முடியாத உண்மையான எதிர்க்கட்சி நாட்டிற்கு தேவை என்று நினைக்கிறேன். தற்போதுள்ள தலைவர்கள் பலரை நான் அறிவேன். தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக ஒரு கட்டத்திற்கு மேல் செல்லமாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் மீது அமலாக்கத்துறையின் பார்வை திரும்பும் அல்லது வேறு ஏதாவது அமைப்பு விசாரணை நடத்தும் என அவர்கள் பயப்படுகிறார்கள். இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. எனவே, இந்தியாவிற்கு ஆளும் கட்சியுடன் நட்பு பாராட்டாத ஒரு எதிர்க்கட்சி தேவை. 

    மம்தா பானர்ஜி இந்தியாவின் பிரதமராக வேண்டும். அவர் தைரியமான பெண்மணி. அவர் கம்யூனிஸ்டுகளை எப்படி எதிர்த்து போராடினார் என்பதை பார்க்க வேண்டும். நான் அவரை 10 நாட்களுக்கு முன்பு சந்தித்தேன், ஆனால் யாருக்கும் தெரியாது. கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக போராடியதில் இருந்தே அவரை நான் அறிவேன். அவரை பிளாக்மெயில் செய்வது என்பது சாத்தியமற்றது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இன்றைய சூழ்நிலையில் நாட்டில் மிகவும் சக்திவாய்ந்த பெண்மணி பற்றிய கேள்விக்கு பதிலளித்த சுவாமி, 'ஒரு காலத்தில் ஜெயலலிதா சக்திவாய்ந்த பெண்மணியாக இருந்தார். அப்படி மாயாவதியையும் நினைத்து பார்த்தேன். தற்போதைய சூழ்நிலையில், மம்தா பானர்ஜி அப்படிப்பட்ட தலைவராக இருக்கிறார். தலைநிமிர்ந்து நிற்கும் துணிவு கொண்ட ஒரே பெண் தலைவர் அவர்தான்' என்றார்.

    • நிதியமைச்சரை நீக்க, கேரள முதலமைச்சருக்கு, ஆளுநர் கடிதம்.
    • ஆரிப் கோரிக்கையை நிராகரித்தார் பினராயி விஜயன்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஆளுநர் ஆரிப் முகமது கான், மாநில அரசுக்கும் இடையே உச்சகட்ட மோதல் நீடித்து வருகிறது. ஆளுநரை நீக்க வேண்டும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபாலை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அக்டோபர் 19 ஆம் தேதி திருவனந்தபுரம் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில நிதியமைச்சர் பாலகோபால் பேசியது இந்தியாவின் ஒற்றுமைக்கு எதிரானதாகவும், பிராந்தியவாதத்தை ஊக்குவிக்கும் வகையிலும் இருப்பதாகவும் தமது கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    பதவிப் பிரமாணம் செய்துவைத்தபோது அவர் எடுத்த உறுதிமொழியை மீறுவதாக இது அமைந்துள்ளது. உறுதிமொழியை வேண்டுமென்றே மீறுபவர்கள் பதவியில் இருக்கத் தகுதியானவர்கள் அல்ல. எனவே அவர் மீது கடுமையான நடவடிக்கை அவசியம் என்று தமது கடிதத்தில் ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் அமைச்சர் கே.என்.பாலகோபால் பேச்சில் தவறு இல்லை என்றும், அதனால் அவரை பதவி நீக்கம் செய்ய முடியாது என்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதனிடையே, பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஆளுநர் என்பவர் குடியரசுத் தலைவரையும், மத்திய அரசையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்பதை கேரள கம்யூனிஸ்டுகள் புரிந்து கொள்ள வேண்டும். கேரள ஆளுநரின் ஒரு முடியை தொட்டால் கூட கேரள அரசை கலைக்க மத்திய அரசு தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×